புங்குடுதீவின் கதை
இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது.பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பொ. ரகுபதிஇ காரைநகரிலுள்ள களபூமியில் பெருங்கற்பண்பாட்டுச் சின்னங்கள் சிலவற்றகை; கண்டு பிடித்தார்.இத்தகைய சின்னங்கள் புங்குடுதீவின் வடபகுதியில் உள்ள ஊரைதீவிலும் காணப்படுகின்றன.இங்கு வட்டக்கற்களாலான சிறு கிணறுகள் தென்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஊரைதீவிலுள்ள ஐயனார் ஆலயம் பழமை வாய்ந்தது. இது இப்பொழுது சிவாலயமாக மாறிவிட்டது. இவ்வாலயத்திலுள்ள கருங்கற் து}ண்இ லிங்கம் என்பன வளர்வதாக கூறப்படுகிறது. இவ்வாலயத்துக்கு வடக்கே உள்ள கடற்கரையில் வட்டக்கற்களினாலான இரண்டு கிணறுகள் இருக்கின்றன. சேர சோழ பாண்டிய மண்டலங்களோடு ஈடமண்டலமும் ஒன்றாகும். சேர சோழ பாண்டிய மண்டலங்களிலிருந்தும் சனங்கள் ஈழமண்டலத்தில் குடியேறினர்இ என்று யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நு}லில் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதியுள்ளார்.
காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மக்கள் தீவுப்பகுதிகளில் குடியேறினர். தென்னிந்திய மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்துக்குக் காலம் பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன.தனிநாயக முதலி பரம்பரையினரை உதாரணமாகக் கொள்ளலாம். புங்குடுதீவு உட்பட ஏனைய தீவுகள் சர்வதேச வர்த்தக மையமாக இருந்தமைக்குப் பல சான்றுகள் உள்ளன. நெடுந்தீவில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன.புங்குடுதீவின் பழைய துறைமுகமான புளியடித்துறைக்கு அருகிலும் பெருக்கு மரங்கள் காணப்பட்டன.இம்மரங்கள் அரேபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன. எனவே அரேபியர் இத்தீவுகளுக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர் எனலாம்.தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதால் புங்குடுதீவில் சோழகனோடைஇ சோழன்புலம்இ பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.
தமிழகத்திலே (கி.பி. 9 ஆம் நு}ற்றாண்டு முதல் 12 ஆம் நு}ற்றாண்டு வரை) மேலாதிக்கம் பெற்ற சோழர் பெருமன்னர்கள் சுமார் ஒரு நு}ற்றாண்டிற்கு இலங்கையின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.இக்கால கட்டத்தில் இந்து சமயம் இங்கு மேலோங்கியிருந்தது எனலாம்.தமிழ்நாட்டிலே ஆதிக்கம் பெற்ற இரண்டாவது பாண்டிய பேரரசு காலத்திலே அவர்களின் ஆதரவுடன் அவர்களின் தளபதிகளில் ஒருவன் ஆரியச்சக்கரவத்தி தலைமையில் யாழ்ப்பாணத்தில் தமிழரசு ஒன்றை உருவாக்கி கி.பி. 1250 முதல் பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.இக்காலப் பகுதியில் இந்தசமயச் செல்வாக்கு தீவகத்தில் மேலோங்கியது எனலாம். இதன் பின்பு போர்த்துக்கீசர்இ ஒல்லாந்தர்இ பிரித்தானியர் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டது. முன்னைய அரசரின் ஆட்சிக்காலங்களிலும் இந்து சமயம் நலிவுற்றது.
பிரித்தானியர் காலத்தில் பொதுவாக சமய சுதந்திரம் நிலவியது எனலாம். ஆதி காலம் தொடக்கம் கிரேக்க உரோமஇ அராபியஇ சீனத் தொடர்புகள் இலங்கையுடன் ஏற்பட்டது. இந்தியாவின் தமிழகம்இ கேரளம்இ ஆந்திரம்இ கன்னடம்இ கலிங்கம் மற்றும் வட இந்திய தொடர்புகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான தொடர்புகள் ஏதோ வகையில் தீவகத்திலும் ஓரளவாவது நிலவி வந்தமைக்கு சில இடப்பெயர்கள் சான்று பகர்கின்றன.பல்லதீவு பல்லவன்புலம் போன்ற இடப்பெயர்கள் பல்லவத் தொடர்பையும் சோழன்புலம்இ சோழகனோடை போன்றவை சோழத் தொடர்புகளையும் மாறன்புலம்இ பாண்டியன் வளவு போன்றவை பாண்டியத் தொடர்பையும்இ கலிங்கன்புலம்இ கலிங்கராயன் வளவு போன்றன கலிங்கத் தொடர்பையும் செட்டிவளவுஇ செட்டியர் தோட்டம் என்பவை செட்டிகளின் தொடர்புகளையும் பணிக்கன்புலம்இ போன்றவை கேரளத் தொடர்பையும் சீனன்புலம்இ சாவகன் வளவு போன்றவை முறையே சீனத் தொடர்பையும் சாவகத் தொடர்பையும் காட்டுகின்றன.
புங்குடுதீவில் 90 சதவீதம் இந்துக்களே வாழுகின்றனர். தீவின் நடுப்பபுதியில் குறிப்பிட்டளவு கிறிஸ்தவர்களும் வாழுகின்றனர். பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென்கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த போர்த்துக்கல் அரசனால் மதம் மாற்றப்பட்டு கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர்.எனினும் கிறிஸ்தவ அறிவைப் போதியளவு கொண்டிராத நிலையில் வாழ்ந்து வந்தனர். இக்கால கட்டத்தில் புனித பிரான்ஸிஸ் சவேரியாரின் வருகையானது மிகப் பெரிய மாறுதலை பரதவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஊக்கத்தையும் உழைப்பையும் மையமாகக் கொண்டு செயலாற்றிய புனிதரின் சேவை மிகு போதகம்இ அவர்கள் வாழ்ந்து வந்த பாதையைச் சீர் செய்தது.
1545 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டத்தில் பரதவ கிறிஸ்தவர்களுக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன.இதனால் இவர்கள் தமது தாயகத்தை விட்டு தப்பியோட முனைந்தனர். கொந்தளிக்கும் அலைகடலையும் குமுறிவரும் காற்றையும் துச்சமென மதித்து வெளியேறிய இச்சமூகத்தினர் இலங்கையின் வடபாலுள்ள பல தீவுகளில் குடியேறினர்.இவர்களில் ஒரு பகுதியினர் புங்குடுதீவில் தென்கீழ் முனையிலும் இறங்கிக் குடியேறினர்.
சில காலம் செல்லத் தீவின் மத்திய பகுதியில் ஆலமரங்களும் பற்றைகள்இ புதர்களும் நிறைந்த இடத்தில் புனித சவேரியாரின் ஆலயத்தை அமைத்தனர். பின்பு அதன் சூழலில் வாழத் தொடங்கினர். இவ்வாறே புங்குடுதீவின் வேறு சில பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் வாழத் தொடங்கினர்.அதனை புங்கு 10 உடுதீவு எனப்பிரித்து புங்கமரம் நிறைந்த தீவு எனப்பொருள் கூறலாம். புங்கமரம் நெய்தல் நிலத்துக் கருப்பொருள்களுள் ஒன்று எனப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை கூறியிருக்கிறார்.
வரலாறு
Monday, 28 February 2011
Wednesday, 1 December 2010
| சப்த தீவுகள் |
| நெடுந்தீவு |
இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகள் சப்த தீவுகள் எனப்படும். அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு:
|
![]() |
| பொருளடக்கம்: 1. தீவுகளின் பெயர் விபரங்கள் 2. வரலாறு 3. சமூகம் 4. பொருளாதாரம் 5. அரசியல் 6. புலம்பெயர்ந்தோர் ஊர் ஒன்றியங்கள் 7. எதிர் காலம் 8. துணை நூல்கள் 9. வெளி இணைப்புகள் 1. தீவுகளின் பெயர் விபரங்கள்சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும் ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:பெயர் ஆங்கிலத்தில் ஒல்லாந்தர் பெயர் கந்தபுராண பெயர் வேலணைத்தீவு Velanaitivu Leiden (லைடன்) சூசை புங்குடுதீவு Punkudutivu Middleburgh கிரவுஞ்சம் நயினாதீவு Nainativu Harlem சம்பு காரைநகர் Karaitivu Amsterdam சாகம் நெடுந்தீவு Neduntheevu Delft (டெல்ப்ற்) புட்கரம் அனலைதீவு Analaitivu Rotterdam கோமேதகம் எழுவைதீவு Eluvaitivu Ilha Deserta இலவு 2. வரலாறுதீவுகளில் மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இடப் பெயர்களை வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென் இந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில் படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது. மேலும் ஊர்காவல்துறை போன்ற துறைகளும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. மேலும் தீவு மக்களின் உணவு மொழி போன்ற சில அம்சங்கள்கேரள மக்களுடன் ஒப்பிடத்தக்கவை.போர்த்துகேயர் (1505 - 1658), ஒல்லாந்தர் (1656 - 1796) ஆகியோரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ குருமார்கள் வந்து போதித்து பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். 3. சமூகம்யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலை அடுக்கமைவே இங்கும் நிலவியது. குறிப்பாக "குடிமைகள்" என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்டோர் வயல்களிலிலும் மேற் சாதி வீடுகளிலும் கூலி வேலைக்குநிர்ப்பந்திக்கப்பட்டு சுரண்டப்பட்டனர். மேலும் சம ஆசனம் சம போசனம் மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர மீனவ சமூகமும் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகவே வாழ்ந்தனர். தற்போது இச் சாதி கட்டமைப்பு தீவு பகுதிகளில் மிதமாக இடம்பெற்ற கிறீஸ்தவ மத மாற்றம் பின்னர் ஏற்பட்ட புலப் பெயர்வு காரணமாக மிகவும் வலுவற்று இருக்கின்றது.யாழ் சமூகத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. யாழ் குடாநாடு போலின்றி தீவுகளில் கல்வி வசதி குறைவு அதன் காரணமாக பலர் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இக் கூற்றை கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை என்ற நூல் பின்வருமாறு விபரிக்கின்றது: "வியாபாரத்தை பொறுத்தமட்டில் (இத்தகைய) கல்வி வசதிகள் பெருமளவில் கிடையாத தீவுப்பகுதியினரே பெரும்பாலும் வெளிப் பிரதேசங்களில் கடைகள் நிறுவினர். இன்றும் இந்நிலைமை ஓரளவு தொடர்ந்து நிலவுவதைக் காணலாம். காரைநகர் புங்குடு தீவு முதலிய தீவுகளை சேர்ந்தவர்கள் இத்துறையில் முன்னோடிகளாக விளங்கினார்". இலங்கையின் வட மாகாணத்துக்கு உள்ளேயும் கிளிநொச்சி மற்றும் வன்னிப் பகுதிகளில்விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது அங்கே இடம்பெயர்ந்து குடியேறியோரில் பெரும்பகுதியினர் தீவுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே. "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதற்க்கமைய ஈழப் போர் காலத்தில் தீவுப் பகுதி மக்கள் பெரும்பாலனவர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள். ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இருந்த வியாபார வெளி தொடர்புகள் இப் புலம் பெயர்வை உந்துவித்திருக்கலாம். பொரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் சிதறி வாழுகின்றார்கள். 4. பொருளாதாரம்விவசாயம் மீன்பிடி வியாபாரம் ஆகிய மூன்று துறைகளுமே தீவுகளின் பொருளாதார அடிப்படை.நில வளம் நீர் வளம் விவசாயத்துக்கு அவ்வளவு ஒத்துழைக்காவிடினும் நெல் தோட்ட செய்கை மற்றும் வியாபாரப் பயிரான புகையிலை செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. இத் தீவுகளின்புவியியல் சூழல் மீன்பிடித்தலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது. தீவக மக்கள் கொழும்பு தென் இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாபார தொடர்புகளை பேணியும் வியாபர தாபனங்களை உருவாக்கியும் பொருள் ஈட்டுவதில் ஈடுபட்டு வந்தனர் வருகின்றனர். இங்கும், யாழிலும் உற்பத்தியாகும் பல பொருட்களை இவ் வியாபரிகளே பல பிரதேசங்களிலும் சந்தைப்படுத்துகின்றார்கள். தீவக பொருளாதார கட்டமைப்பை யாழ்ப்பாண அரச உத்தியோக உயர் கல்வி தொழில் ரீதியிலான பொருளாதார கட்டமைப்போடு ஒப்பிட்டு வேறுபாடு சுட்டலாம்.5. அரசியல்தீவுகள் அரசியல் முக்கியத்துவம் அற்ற பிரதேசங்களாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளன. எனவேதான் இந்திய அமைதிகாக்கும் படை தீவுகளை ஆக்கிரமிக்கவில்லை. மேலும் இலங்கை அரசு தீவுப்பகுதிகளை ஆக்கிரமித்த பொழுது ஈழப் போராளிகள் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க முயலவில்லை[1]. எனினும் நயினா தீவில் உள்ள விகாரை மற்றும் இராணுவ முகாம் ஊர்காவல்துறையில் உள்ள துறைமுகம் என்பன கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.6. புலம்பெயர்ந்தோர் ஊர் ஒன்றியங்கள்இத் தீவுகளில் இருந்து இடம் பெயர்ந்தோர் அத்தீவுகளின் சார்பாகவோ அல்லது அத்தீவுகளில் உள்ள கிராமங்களின் சார்பாகவோ ஊர் ஒன்றியங்கள் அமைத்து அத் தீவுகளில் சமூக சேவை செய்யது வருகின்றார்கள். ஆபத்து உதவிகள் வைத்திய உதவிகள் பாடசாலைகள் மீள் கட்டமைப்பு சனசமூக நிலையங்கள் பராமரிப்பு தொழில் வள உதவிகள் (படகுகள் மீன் வலைகள் இழுவை இயந்திரங்கள்விதைகள் விவசாய நுட்பங்கள் மர வேலை கருவிகள்) பொருள் சந்தைப்படுத்தல் ஏற்றுமதிஉதவிகள் போக்குவரத்து மேம்படுத்தல் மின்சத்தி வழங்குதல் கணணி கல்வி ஊக்குவிப்பு தொலை தொடர்பு மேம்படுத்தல் குழந்தைகள்-முதியோர்-நோய்வாய்பட்டோர் பராமரிப்புகோயில்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள் பராமரிப்பு மற்றும் விழா எடுத்தல் போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு அங்கிருக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர்.இவ் அமைப்புகள் தொடர்பு தகவல்கள் வியாபார/விளம்பர கைநூல்களில் இருக்கின்றன. அவற்றின் விபரம் பின்வருமாறு:
|
Tuesday, 12 October 2010
புங்குடுதீவு ஓரு கிராமம்
புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது ஆட்சியின் போதுஇந்த ஏழுதீவுகளுக்கும் ஹோல்லந்தில் உள்ள இடங்களின் பெயர்களை சூடி மகிழ்ந்தனர்.அந்த வகையில் புங்குடுதீவுக்கு மிட்டில்ஹ்பெர்க் என்று நாமம் இட்டு அழைத்தனர் . யாழ்ப்பானதிலிருந்து தெற்கு பண்ணை பாலம் ஊடாக மனடைதீவு சந்தி அல்லைப்பிட்டி அராலி சந்தி வேலணை வங்களாவடி வேலனைதுறை கடந்து புங்குடுதீவுக்கான இலங்கையிலேயே பெரியதான வாணர் தாம்போதி மேலே பயணம் மேற்கொண்டால் புங்குடுதீவை அடையலாம்.
புங்குடுதீவு சுமார்ஆறு மைல்நீளமும் ஐந்து மைல் அகலமும் கொண்ட நால் புறமும் கடலால் சூழப்பட்டு வேலையுடன் நேரிய பேரு வீதியினால கடலினூடே இணைக்க பட்ட ஓரு பிரதேசமாகும். ஓரளவு சதுர வடிவில் இருந்தாலும் கேரதீவு ஓடான நீரேரியின் பிரிப்பினால் ப எழுத்து வடிவிலும் தோன்றும் .வட கிழக்கே வேலனைத்தீவினையும் மேற்கே நயினாதீவினையும் தென்மேற்கே தூரத்திலே நெடுன்தீவினையும் கொண்டு மத்தியிலே இத்தீவு சீராக அமைந்துள்ளதுஇ தீவின் தெற்குப் பகுதி உயர்வாகவும் வடக்கு பகுதி தாழ்வாகவும் காணபடுகிறது .
புங்குடுதீவில் பல வகையான தரை அமைப்புகளும் காணப் படுகின்றன.மடத்துவெளி கரை பகுதிகள் சீனி போன்ற தூய வெள்ளை பளிங்கு மணல் பகுதியாகவும் ஊரதீவு மட்டும் தீவின் தெற்கு பகுதி கரைகள் இளமைன்சல் மணல்பகுதியாகவும் இருகின்றன.மடத்துவெளி ஊரதீவு பகுதிகள் சமதரைகளாக அமைந்துள்ளன.மேல் பகுதி மணல் தன்மையாகவும் சட்டு கீழே நரை நிற மக்கியாகவும் இன்னும் கீழே நல்ல தரமான களிமண்ணாகவும் அமைந்துள்ளது.வல்லன் பகுதி மற்றும் வீராமலை பகுதிகள் விவசாயத்திற்கு சிறந்த சிறிய குறுநி கலந்த கருநிற நிலமாக உள்ளன.குரிசிக்காடு போக்கதை பகுதிக்கு மேற்கே மிக அசாதாரணமான வகையில் செம்மண் பகுதியாகக உள்ளது.பெருங்காடு இருபிட்டி தெற்கு போன்ற பகுதிகள் மேலே குறைந்தளவு மண்ணும் கட் பாங்கான கீழ் பகுதியாகவும் காணப்படுகின்றன.
இந்த தரை தோற்ற அடிப்படையில் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு இருபிட்டி வடக்கு வல்லன் பகுதிகளில் நெல் பயிர் செய்கைக்கு உட்படுத்த படுகின்றன. வல்லன் வீரமலை நடுவுதுருதி பகுதிகளில் மிளகாய் புகையில வெங்காயம் போன்றன தரமான முறையில் பயிரிடபடுகின்றன-சுமார் நாற்பது ஆண்டுகளின் முன்னே வரை பெரும்பாலான மேட்டு பகுதிகளில் சிறு தானியங்களான வரகு சமை குரக்கன் பயறு உழுந்து பயிர்கள் பயிரிடப்பட்டன.இவற்றை விட நிறைந்த பனை தென்னை வளம் மிக்க கிராமமாக புங்குட்தீவு திகழ்கின்றது. விருட்சங்களாக வேம்பு பூவரசு ஆள் அரசு இத்தி கதியால் முருங்கை சீமைகதியால் போன்றனவும் கடல்கரை ஓரங்களில் ஆவாரை கற்றாளை கள்ளி கொட்டனி போன்ற மருத்துவ குணாசெடிகளும் காணபடுகின்றன
புங்குடுதீவு சுமார்ஆறு மைல்நீளமும் ஐந்து மைல் அகலமும் கொண்ட நால் புறமும் கடலால் சூழப்பட்டு வேலையுடன் நேரிய பேரு வீதியினால கடலினூடே இணைக்க பட்ட ஓரு பிரதேசமாகும். ஓரளவு சதுர வடிவில் இருந்தாலும் கேரதீவு ஓடான நீரேரியின் பிரிப்பினால் ப எழுத்து வடிவிலும் தோன்றும் .வட கிழக்கே வேலனைத்தீவினையும் மேற்கே நயினாதீவினையும் தென்மேற்கே தூரத்திலே நெடுன்தீவினையும் கொண்டு மத்தியிலே இத்தீவு சீராக அமைந்துள்ளதுஇ தீவின் தெற்குப் பகுதி உயர்வாகவும் வடக்கு பகுதி தாழ்வாகவும் காணபடுகிறது .
புங்குடுதீவில் பல வகையான தரை அமைப்புகளும் காணப் படுகின்றன.மடத்துவெளி கரை பகுதிகள் சீனி போன்ற தூய வெள்ளை பளிங்கு மணல் பகுதியாகவும் ஊரதீவு மட்டும் தீவின் தெற்கு பகுதி கரைகள் இளமைன்சல் மணல்பகுதியாகவும் இருகின்றன.மடத்துவெளி ஊரதீவு பகுதிகள் சமதரைகளாக அமைந்துள்ளன.மேல் பகுதி மணல் தன்மையாகவும் சட்டு கீழே நரை நிற மக்கியாகவும் இன்னும் கீழே நல்ல தரமான களிமண்ணாகவும் அமைந்துள்ளது.வல்லன் பகுதி மற்றும் வீராமலை பகுதிகள் விவசாயத்திற்கு சிறந்த சிறிய குறுநி கலந்த கருநிற நிலமாக உள்ளன.குரிசிக்காடு போக்கதை பகுதிக்கு மேற்கே மிக அசாதாரணமான வகையில் செம்மண் பகுதியாகக உள்ளது.பெருங்காடு இருபிட்டி தெற்கு போன்ற பகுதிகள் மேலே குறைந்தளவு மண்ணும் கட் பாங்கான கீழ் பகுதியாகவும் காணப்படுகின்றன.
இந்த தரை தோற்ற அடிப்படையில் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு இருபிட்டி வடக்கு வல்லன் பகுதிகளில் நெல் பயிர் செய்கைக்கு உட்படுத்த படுகின்றன. வல்லன் வீரமலை நடுவுதுருதி பகுதிகளில் மிளகாய் புகையில வெங்காயம் போன்றன தரமான முறையில் பயிரிடபடுகின்றன-சுமார் நாற்பது ஆண்டுகளின் முன்னே வரை பெரும்பாலான மேட்டு பகுதிகளில் சிறு தானியங்களான வரகு சமை குரக்கன் பயறு உழுந்து பயிர்கள் பயிரிடப்பட்டன.இவற்றை விட நிறைந்த பனை தென்னை வளம் மிக்க கிராமமாக புங்குட்தீவு திகழ்கின்றது. விருட்சங்களாக வேம்பு பூவரசு ஆள் அரசு இத்தி கதியால் முருங்கை சீமைகதியால் போன்றனவும் கடல்கரை ஓரங்களில் ஆவாரை கற்றாளை கள்ளி கொட்டனி போன்ற மருத்துவ குணாசெடிகளும் காணபடுகின்றன
Labels:
புங்குடுதீவு ஓரு கிராமம்
Monday, 11 October 2010
வாணர் தாம்போதி
வாணர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு தரைப்பாதைகள் மட்டுமின்றி கடற்பாதைகளும் முக்கிய தேவைகளாக அமைகின்றன.யாழ்ப்பாண நகரத்திலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் நடுக்கடலில் ~ப| வடிவில் அமைந்திருக்கும் நலப்பரப்புத்தான் புங்குடுதீவு கிராமம்.
யாழ்ப்பாண நகரையும் வேலணைத்தீவையும் இணைக்கும் கடல்மீதான தரைப்பாதை பண்ணை தாம்போதி என்று அழைக்கப்படுகிறது. புங்குடுதீவுக்கும் வேலணை தீவுக்கும் இடையில் பரந்து கிடக்கும் கடலுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாதை ~~அம்பலவாணர் தாம்போதி|| என்று அழைக்கப்படுகிறது.
யாழ்ப்பாண நகரையும் வேலணைத்தீவையும் இணைக்கும் கடல்மீதான தரைப்பாதை பண்ணை தாம்போதி என்று அழைக்கப்படுகிறது. புங்குடுதீவுக்கும் வேலணை தீவுக்கும் இடையில் பரந்து கிடக்கும் கடலுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாதை ~~அம்பலவாணர் தாம்போதி|| என்று அழைக்கப்படுகிறது.
புங்குடுதீவில் பிறந்த அம்பலவாணர் என்ற பெரியார் இத்தாம்போதியை அமைத்தமையால் இதற்கு அந்தப்பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.4.8 கிலோமீற்றர் தூரமுள்ள இத்தாம்போதி இலங்கையிலேயே மிகநீண்ட தாம்போதியாகும்.
புங்குடுதீவு மக்கிளன் நீண்டகால முயற்சியின் பின்பே இது அமைக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் எதிரெதிரே கடக்கக்கூடிய அகலமான வீதி.ஐம்பதுக்கு மேற்பட்ட மதகுகளும் ஒரு பெரிய பாலமும் இந்த நீண்ட பாதையில் அமைந்திருக்கின்றன.
கடலின் நடுவே பெரிய பாறாங்கற்கள் நட்டு அதன்மீது மணலும் சீமெந்தும் பூசி தார்இட்டு நீண்டவீதுpயாக இந்த தாம்போதி அமைக்கப்பட்டிருக்கிறது.
புங்குடுதீவின் போக்குவரத்தை தரைப்பாதையினூடாக அமைத்துக்கொடுத்த பெருமை இந்த அம்பலவாணர் தாம்போதிக்கே உரியது.மேற்படி பாதையை அமைப்பதில் முன்னின்று உழைத்த அம்பலவாணர் சகோதரர்களை, புங்குடுதீவு மக்கள் என்று நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
புங்குடுதீவில் பிறந்த சமூக சேவகர்கள்தான் பெரிய வாணரும் சின்னவாணரும். இவர்கள் இருவரும் இளமைக்காலத்திலேயே புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் அனுபவிக்கும் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்திருந்தனர்.பெரிய வாணர் படிப்பு முடிந்ததும் தொழில்தேடி மலேசியா சென்றார்.
மலேசியாவில் தீவுகளுக்கிடையே அமைந்துள்ள தாம்போதிகள் போன்று புங்குடுதீவுக்கும் வேலணைக்கும் இடையில் ஒரு பெரியதாம்போதியை அமைக்கவேண்டுமென்று அவர் கனவு கண்டார்.தமது கனவை நனவாக்க பெரிய சாதனைகளை அவர் செய்யவேண்டியிருந்தது.மலேசியாவில் வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, புங்குடுதீவு மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கான வழிவகைகளை ஆராய்ந்தார்.
1918 ஆம் ஆண்டு நாடு திரும்பிய பெரியவாணர் முறைப்படி தாம்போதியை அமைக்கவேண்டுமென புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் கையொப்பம் வாங்கி அரசுக்கு அனுப்பினார்.
தாம்போதி அமைப்பது சம்பந்தமாக கொழும்பில் அரசபிரநிதிகளைச் சந்திப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, போக்குவரத்து அவலங்களைப் புகைப்படங்கள் மூலம் நாடு முழுவதும் அறியச்செய்வது போன்ற பணிகளில் பெரியவாணர் முழு முயற்சியுடன் ஈடுபட்டார்.
புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் சென்று கையொப்பங்களை வாங்குவதில் சின்ன வாணரும் அவடன் ஈடுபட்டார்.1922 ஆம் ஆண்டு ~~புங்குடுதீவு மகாஜன சேவாசங்கம்|| என்ற சங்கத்தை ஆரம்பித்த அம்பலவாணர் சகோதரர்கள், பல அங்கத்தவர்களை சேர்த்துக்கெண்டனர். இதற்காக அதனை 1926 ஆம் ஆண்டு ~~அகில இலங்கை மகாஜன சேவா சங்கம்|| என்று பெயர்மாற்றினார்கள்.இந்த அமைப்பினூடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதி போன்றோரை அழைத்து வந்து பிரச்சினைகளை எடுத்துக்கூறினர்.
அதன் பலனாக 1935 இல் சட்டநிரூபண சபையில் ~~தாம்போதி|| அமைக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.சட்டநிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி அங்கத்தவர் பண்டிட் பட்டுவந்து டாவ, தொழிற்சங்கவாதி ஏ.ஈ.குணசிங்க, ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம் ஆகியோர், தாம்போதி அமைக்க வேண்டும் என்று பல ஆதாரங்களுடன் வாதாடி அனுமதியையும் நிதியையும் பெற்றுக்கொண்டனர்.
வாணர் சகோதரர்கள் கண்ட கனவு நனவாகியது.1935 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதி வேலை ஆரம்பமாகியது. பல்வேறு வழிகளில் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் 3701 வாக்குகளையே பெறமுடிந்தது.
பெரும்பாலும் புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவை அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
காலூர் எம்.பி.அல்பிரட் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார்.அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானார். பெரியவாணர் அமைத்த பிரமாண்டமான தாம்போதி அன்றுமுதல் இன்றுவரை இளமையாகவே காட்சியளிக்கிறது.
எந்தப்போருக்கும் செல்லடிக்கும் குண்டுமழைக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அது அம்பலவாணரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.
Labels:
வாணர் தாம்போதி
புங்குடுதீவின் வரலாறு
புங்குடுதீவின் வரலாறு
இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது.
பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.
1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பொ. ரகுபதி, காரைநகரிலுள்ள களபூமியில் பெருங்கற்பண்பாட்டுச் சின்னங்கள் சிலவற்றகை; கண்டு பிடித்தார்.
இத்தகைய சின்னங்கள் புங்குடுதீவின் வடபகுதியில் உள்ள ஊரைதீவிலும் காணப்படுகின்றன.
இங்கு வட்டக்கற்களாலான சிறு கிணறுகள் தென்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஊரைதீவிலுள்ள ஐயனார் ஆலயம் பழமை வாய்ந்தது. இது இப்பொழுது சிவாலயமாக மாறிவிட்டது. இவ்வாலயத்திலுள்ள கருங்கற் து}ண், லிங்கம் என்பன வளர்வதாக கூறப்படுகிறது. இவ்வாலயத்துக்கு வடக்கே உள்ள கடற்கரையில் வட்டக்கற்களினாலான இரண்டு கிணறுகள் இருக்கின்றன.
சேர சோழ பாண்டிய மண்டலங்களோடு ஈடமண்டலமும் ஒன்றாகும். சேர சோழ பாண்டிய மண்டலங்களிலிருந்தும் சனங்கள் ஈழமண்டலத்தில் குடியேறினர், என்று யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நு}லில் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதியுள்ளார்.
காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மக்கள் தீவுப்பகுதிகளில் குடியேறினர். தென்னிந்திய மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்துக்குக் காலம் பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
தனிநாயக முதலி பரம்பரையினரை உதாரணமாகக் கொள்ளலாம். புங்குடுதீவு உட்பட ஏனைய தீவுகள் சர்வதேச வர்த்தக மையமாக இருந்தமைக்குப் பல சான்றுகள் உள்ளன. நெடுந்தீவில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன.
புங்குடுதீவின் பழைய துறைமுகமான புளியடித்துறைக்கு அருகிலும் பெருக்கு மரங்கள் காணப்பட்டன.
இம்மரங்கள் அரேபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன. எனவே அரேபியர் இத்தீவுகளுக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர் எனலாம்.
தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதால் புங்குடுதீவில் சோழகனோடை, சோழன்புலம், பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.
தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதால் புங்குடுதீவில் சோழகனோடை, சோழன்புலம், பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.
தமிழகத்திலே (கி.பி. 9 ஆம் நு}ற்றாண்டு முதல் 12 ஆம் நு}ற்றாண்டு வரை) மேலாதிக்கம் பெற்ற சோழர் பெருமன்னர்கள் சுமார் ஒரு நு}ற்றாண்டிற்கு இலங்கையின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.
இக்கால கட்டத்தில் இந்து சமயம் இங்கு மேலோங்கியிருந்தது எனலாம்.
தமிழ்நாட்டிலே ஆதிக்கம் பெற்ற இரண்டாவது பாண்டிய பேரரசு காலத்திலே அவர்களின் ஆதரவுடன் அவர்களின் தளபதிகளில் ஒருவன் ஆரியச்சக்கரவத்தி தலைமையில் யாழ்ப்பாணத்தில் தமிழரசு ஒன்றை உருவாக்கி கி.பி. 1250 முதல் பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
இக்காலப் பகுதியில் இந்தசமயச் செல்வாக்கு தீவகத்தில் மேலோங்கியது எனலாம்.
இக்காலப் பகுதியில் இந்தசமயச் செல்வாக்கு தீவகத்தில் மேலோங்கியது எனலாம்.
இதன் பின்பு போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டது. முன்னைய அரசரின் ஆட்சிக்காலங்களிலும் இந்து சமயம் நலிவுற்றது.
பிரித்தானியர் காலத்தில் பொதுவாக சமய சுதந்திரம் நிலவியது எனலாம். ஆதி காலம் தொடக்கம் கிரேக்க உரோம, அராபிய, சீனத் தொடர்புகள் இலங்கையுடன் ஏற்பட்டது. இந்தியாவின் தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம், கலிங்கம் மற்றும் வட இந்திய தொடர்புகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான தொடர்புகள் ஏதோ வகையில் தீவகத்திலும் ஓரளவாவது நிலவி வந்தமைக்கு சில இடப்பெயர்கள் சான்று பகர்கின்றன.
பல்லதீவு, பல்லவன்புலம் போன்ற இடப்பெயர்கள் பல்லவத் தொடர்பையும் சோழன்புலம், சோழகனோடை போன்றவை சோழத் தொடர்புகளையும் மாறன்புலம், பாண்டியன் வளவு போன்றவை பாண்டியத் தொடர்பையும், கலிங்கன்புலம், கலிங்கராயன் வளவு போன்றன கலிங்கத் தொடர்பையும் செட்டிவளவு, செட்டியர் தோட்டம் என்பவை செட்டிகளின் தொடர்புகளையும் பணிக்கன்புலம், போன்றவை கேரளத் தொடர்பையும் சீனன்புலம், சாவகன் வளவு போன்றவை முறையே சீனத் தொடர்பையும் சாவகத் தொடர்பையும் காட்டுகின்றன.
புங்குடுதீவில் 90 சதவீதம் இந்துக்களே வாழுகின்றனர். தீவின் நடுப்பபுதியில் குறிப்பிட்டளவு கிறிஸ்தவர்களும் வாழுகின்றனர். பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென்கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த போர்த்துக்கல் அரசனால் மதம் மாற்றப்பட்டு கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர்.
எனினும் கிறிஸ்தவ அறிவைப் போதியளவு கொண்டிராத நிலையில் வாழ்ந்து வந்தனர். இக்கால கட்டத்தில் புனித பிரான்ஸிஸ் சவேரியாரின் வருகையானது மிகப் பெரிய மாறுதலை பரதவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஊக்கத்தையும் உழைப்பையும் மையமாகக் கொண்டு செயலாற்றிய புனிதரின் சேவை மிகு போதகம், அவர்கள் வாழ்ந்து வந்த பாதையைச் சீர் செய்தது.
1545 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டத்தில் பரதவ கிறிஸ்தவர்களுக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன.
இதனால் இவர்கள் தமது தாயகத்தை விட்டு தப்பியோட முனைந்தனர். கொந்தளிக்கும் அலைகடலையும் குமுறிவரும் காற்றையும் துச்சமென மதித்து வெளியேறிய இச்சமூகத்தினர் இலங்கையின் வடபாலுள்ள பல தீவுகளில் குடியேறினர்.
இவர்களில் ஒரு பகுதியினர் புங்குடுதீவில் தென்கீழ் முனையிலும் இறங்கிக் குடியேறினர்.
இதனால் இவர்கள் தமது தாயகத்தை விட்டு தப்பியோட முனைந்தனர். கொந்தளிக்கும் அலைகடலையும் குமுறிவரும் காற்றையும் துச்சமென மதித்து வெளியேறிய இச்சமூகத்தினர் இலங்கையின் வடபாலுள்ள பல தீவுகளில் குடியேறினர்.
இவர்களில் ஒரு பகுதியினர் புங்குடுதீவில் தென்கீழ் முனையிலும் இறங்கிக் குடியேறினர்.
சில காலம் செல்லத் தீவின் மத்திய பகுதியில் ஆலமரங்களும் பற்றைகள், புதர்களும் நிறைந்த இடத்தில் புனித சவேரியாரின் ஆலயத்தை அமைத்தனர். பின்பு அதன் சூழலில் வாழத் தொடங்கினர். இவ்வாறே புங்குடுதீவின் வேறு சில பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் வாழத் தொடங்கினர்.
அதனை புங்கு 10 உடுதீவு எனப்பிரித்து புங்கமரம் நிறைந்த தீவு எனப்பொருள் கூறலாம். புங்கமரம் நெய்தல் நிலத்துக் கருப்பொருள்களுள் ஒன்று எனப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை கூறியிருக்கிறார்.
Labels:
புங்குடுதீவின் வரலாறு
புங்குடுதீவு-புவியியல்
புங்குடுதீவு-புவியியல்
யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்ததீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக் கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இத்தீவானது ஏனைய தீவுகளால் சூழப்பட்டுள்ளதுடன் 11.2 சதுர மைல் பரப்பளவினைக் கொண்டுள்ளது.
பாய்க்கப்பலின் உருவத்தினைப் போன்ற நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ள இத்தீவானது யாழ்ப்பாண நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளதுடன் வேலணைத்தீவிலிருந்து ஆழம் குறைந்த 3 மைல் கடற்பரப்பினாற் பிரிக்கப்பட்டுள்ளது.
இத்தீவின் பிரதான நிலப்பரப்பு தவிர்ந்த ஊரதீவு பல்லதீவு கேரதீவு போன்ற சிறு தீவுகள் மழைக்காலங்களில் நீரினால் பிரிக்கப்பட்டும் கோடை காலங்களில் இணைந்தும் காணப்படுகின்றது.
1981ம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டின்படி 14 622 மக்கள் வாழ்ந்திருந்தனர்.
1991ம் ஆண்டு 17000 மக்கள் வாழ்ந்துள்ளனர் என மதீப்பீடுகள் தெரிவிக்கின்றன.
பௌதீக வளம
பௌதீக ரீதியாக புங்குடுதீவுக் கிராமத்தை நோக்கும் போது இத்தீவின் தென்கிழக்கே வீராமலைப்பகுதி உயரம் கூடிய பிரதேசமாகவும் வடமேற்கு நோக்கி படிப்படியாகத் தாழ்ந்து செல்வதைக் காணமுடிகின்றது.
பௌதீக ரீதியாக புங்குடுதீவுக் கிராமத்தை நோக்கும் போது இத்தீவின் தென்கிழக்கே வீராமலைப்பகுதி உயரம் கூடிய பிரதேசமாகவும் வடமேற்கு நோக்கி படிப்படியாகத் தாழ்ந்து செல்வதைக் காணமுடிகின்றது.
மரி காலங்களில் வீராமலைப் பகுதி மற்றும் அதன் அயற் பகுதிகளிலிருந்தும் நீர் வழிந்தோடி கள்ளியாற்றுடன் சங்கமமாவதைக் காணமுடிகின்றது. இத்தீவின் தென்பகுதி உயரம் கூடியதாகவும் வடபகுதி தாழ்ந்ததாகவும் இருப்பதுடன் கேரதீவைச் சார்ந்த பகுதிகள் சதுப்பு நிலத்தை ஒத்த பண்புகளைக் கொண்டதாகவுள்ளன.
பொதுவாக இத்தீவின் சராசரி வெப்பநிலை 80′ பரணைற்றாகவும் வருடாந்த மழைவீழ்ச்சி 50″ க்கும் குறைவாக இருப்பதனாலும் வளம் குறைந்த நரைமண் தொகுதியே பெரும்பாலான பகுதிகளில் சிப்பி கலந்த மண்களிமண் ஊரிகலந்த மண் கொழுக்கிக்கல் கலந்த மண் என்பன காணப்படுகின்றன.
இத்தீவின் நீர் வளத்தினைப் பொறுத்தவரை 68.0 சதவீதமான கிணறுகளில் உவர்த்தன்மை கொண்ட நீரே காணப்படுகின்றன என அண்மைக்காலங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நன்னீர் வளம் ஆங்காங்கே தொட்டத் தொட்டமாக காணப்படுகின்றது.
இதனால் மக்களது அன்றாட வாழ்வுப் பிரச்சினையில் நீர்வளப்பயன்பாட்டுத் தன்மை முக்கியமான இடத்தினைப் பிடித்துள்ளது.
வரலாற்று நோக்கு
புங்குடுதீவுக் கிராமத்தில் வரலாறு தீவகத்தின் வரலாற்றுடன் மட்டுமல்லாது. யாழ்ப்பாணக்குடாநாட்டுடனும் தென்னிந்தியாவுடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றது.
புங்குடுதீவுக் கிராமத்தில் வரலாறு தீவகத்தின் வரலாற்றுடன் மட்டுமல்லாது. யாழ்ப்பாணக்குடாநாட்டுடனும் தென்னிந்தியாவுடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றது.
வளவாய்ப்புகளைக் கொண்ட யாழ்ப்பாணக்குடா நாட்டுக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான மக்கள் போக்குவரத்தில் தீவுப்பகுதி உட்பட புங்குடுதீவு முக்கிய இடத்தில் அமைந்துள்ளமை தென்னிந்திய மக்களின் உள்வரவுக்கு உதவியிருக்கலாம்.
குறிப்பாக காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள பௌதீக மற்றும் அரசியல் மாற்றங்களால் மக்கள் இப்பகுதிகளில் வந்து வாழ்திருக்க நியாயம் உண்டு.
அதாவது தென்னிந்தியாவிலிருந்து வந்துள்ள மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்திற்குக் காலம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இது மட்டுமல்லாது இத்தீவு உட்பட ஏனைய தீவுகள் சர்வதேச வர்த்தக மையமாக இருந்துள்ளதைமக்கு பல்வேறு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஊதாரணமாக புங்குடுதீவு புளியடித்துறை என்ற தற்போது பயன்படுத்தப்படாத துறைமுகத்திற்கு அருகாமையில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன.
இம்மரங்கள் அராபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன என்பர். ஏனவே அராபியர் இத்தீவுக்கு வந்து வர்த்தகத்தில் டுபட்டிருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வல்லிபுரத்தில் கண்டு எடுக்கப்பட்ட சாசனத்தில் பியாங்கு தீபம் பற்றி குறிப்பிட்டுள்ளது. தற்போதைய புங்குடுதீவையே முன்னர் பியாங்கு என அழைக்கப்பட்டுள்ளது. என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.பியாங்குச் செடிகள் அதிகமாக காணப்பட்டிருந்தமையால் பியாங்குதீபம் என அழைக்கப்பட்டிருந்த இத்தீவு காலப்போக்கில் பியாங்குதீவு எனவும் பின்னர் புங்குடுதீவு எனவும் மருவியதாக கொள்ள இடம் உண்டு.
தமிழ்நாட்டு மக்களின் தொடர்பு காணப்பட்டிருந்தமையால் அங்குள்ள புங்கநூர் ங்குடி என்ற இடப்பெயர்வு இத்தீவுக்கு அவர்களால் சூட்டப்பட்டிருக்கலாம்.
இஸ்லாமியர்களது படையெடுப்புக் காலத்தில் அவர்களது கொடுமையிலிருந்து தப்பி தமது கன்னிப் பெண்களை பாதுகாக்கும்
நோக்குடன் இத்தீவில் வந்து குடியேறினர் எனவும் அவர்களால் இடப்பட்ட )ங்குடி என்ற பெயர் காலப்போக்கில் மருவி புங்குடுதீவு என வழக்கில் வந்துள்ளது என கொள்பவர்களும் உளர்.
நோக்குடன் இத்தீவில் வந்து குடியேறினர் எனவும் அவர்களால் இடப்பட்ட )ங்குடி என்ற பெயர் காலப்போக்கில் மருவி புங்குடுதீவு என வழக்கில் வந்துள்ளது என கொள்பவர்களும் உளர்.
வேறுசிலர் புங்கமரம் நிறைந்து காணப்பட்டபடியால் புங்கு-உடு-தீவு என பிரித்து புங்கமரம் நிறைந்த தீவு எனப் பொருள் கொள்கின்றனர். தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றமையால் புங்குடதீவில் சோழனோடை சோழம்புலம் பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.
ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் குறிப்பாக போர்த்துக்கீசர் இத்தீவுக்கு கொங்கரடிவா எனவும் ஒல்லாந்தர் மிடில்பேக் எனவும் பெயரிட்டு அழைத்துள்ளனர்.
தீவுகளின் மத்தியில் அமைந்துள்ளமையால் மிடில்பேர்க் என பெயர்வைத்துள்ளனர் என்றே கொள்ள வேண்டும்.
Labels:
புங்குடுதீவு-புவியியல்
Subscribe to:
Posts (Atom)
